Olympic update : துப்பாக்கிச்சூட்டில் தவறிய பதக்கம் : ஏமாற்றமளித்தார் இளவேனில் வாலறிவன்…!!

Author: Babu
24 July 2021, 6:44 pm
elavenil valarivan - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர், விராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். பளுதூக்குதல், மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல் உள்பட சில முக்கிய விளையாட்டுக்களில் இந்தியர்கள் மீதான எதிர்பார்ப்பு வழக்கம் போல இந்த முறையும் அதிகரித்தே காணப்படுகிறது.

ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் இறுதிச்சுற்று வரை சென்ற சவுரவ் சவுத்ரி நிச்சயம் பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவினார்.

இதேபோல, பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மற்றும் 3 முறை உலகக்கோப்பையில் தங்கம் வென்ற அபுர்வி சண்டேலா ஆகியோர் பங்கேற்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளவேனில், 626.5 புள்ளிகளை மட்டுமே பெற்று 16வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இளவேனிலின் பதக்கக் கனவு தகர்ந்தது. அதேபோல, அபுர்வி 36வது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 231

0

0