4வது டெஸ்டிலும் முதல்நாளிலே ஆல் அவுட்டான இங்கிலாந்து : கில் ஆட்டம்… இந்திய அணி ஏமாற்றம்..!!!

4 March 2021, 4:36 pm
Ben stokes - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆமதாபாத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.

க்ரவ்லி, சிப்லே, ரூட் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும், பேர்ஸ்டோவ் (28), ஸ்டோக்ஸ் (55), போப் (29), லாரன்ஸ் (46) ஆகியோர் ஓரளவிற்கு தாக்குபிடித்ததால் இங்கிலாந்து அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. அந்த 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, கில் ஆட்டத்தின் 3 பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, ரோகித் சர்மாவுடன், புஜாரா இணைந்து விளையாடி வருகிறார்.

Views: - 29

0

0