இங்கிலாந்தில் நீண்ட டெஸ்ட் தொடர் : குடும்பத்தையும் அழைத்துச் செல்ல இந்திய வீரர்களுக்கு அனுமதி…!!

1 June 2021, 3:51 pm
kohli and anushka sharma - updatenews360
Quick Share

டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு, குடும்பத்தையும் உடன் அழைத்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியைக் காண 4,000 ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெஸ்ட் சாம்பியன்ஸ் பைனல் போட்டிக்கு பிறகு அங்கேயே தங்கியிருக்கும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் ஆக., 4ம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான இந்திய வீரர்கள் ஜூன் 3ல் இங்கிலாந்து புறப்பட்டு செல்கின்றனர்.

இதனிடையே, இங்கிலாந்தில் 4 மாதங்கள் தங்க வேண்டியிருப்பதால், தங்களின் குடும்பத்தினரையும் இங்கிலாந்து வருவதற்கு அனுமதிக்க வேண்டும என்று வீரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையையும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் இங்கிலாந்து புறப்பட இருக்கின்றனர்.

ஆடவர் அணியோடு, மகளிர் அணியினரும் செல்கின்றனர். மகளிர் அணியினர் குறுகிய காலம் மட்டுமே இங்கிலாந்தில் தங்குவதால், அவர்களின் குடும்பத்தினருக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

Views: - 406

0

0