வரலாற்று பிழையை மாற்றுமா இங்கிலாந்து..? நாளை பாகிஸ்தானுடன் முதல் டெஸ்டில் மோதல்..!
4 August 2020, 4:58 pmகொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, எஞ்சிய இரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்று அசத்தியது.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த ஒரு வார இடைவெளிக்கு பிறகு, இங்கிலாந்து அணி பாகிஸ்தான் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மான்செஸ்டரில் தொடங்குகிறது.
சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதேவேளையில், கடந்த 10 தொடரில் 8-ல் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த அணி என்னும் மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று, அந்த சாதனையை தகர்க்க இங்கிலாந்து அணி முயற்சிக்கும்.
கடந்த இரு முறை இங்கிலாந்துப் பயணத்தின் போது தொடரை சமன் செய்த பாகிஸ்தான், இந்த முறை தொடரை வென்றாக வேண்டும் நம்பிக்கையில் களமிறங்கும்.
0
0