7 வருஷத்துக்கு அப்புறம் நடந்த தரமான சம்பவம் : முதல் டெஸ்டில் நடந்த சுவாரஸ்யம் குறித்து ஆண்டர்சன் ஓபன் டாக்..!!

Author: Babu Lakshmanan
6 August 2021, 2:14 pm
anderson - kohli - updatenews360
Quick Share

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ரூட் மட்டுமே நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தார். மற் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, அந்த அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு சுருண்டது.

இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா – கேஎல் ராகுல் அபாரமான தொடக்கத்தை கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 97ஐ எட்டிய போது, ரோகித் சர்மா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த புஜாரா 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 4வது வீரராக வந்த கேப்டன் கோலி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன்னின் பந்தில் வந்த வேகத்தில் முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார்.

கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றியதும் மிகவும் உற்சாகமாக மைதானத்தை வலம் வந்தார் ஆண்டர்சன். இதற்கு முழு முழு காரணம் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு விராட் கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் கைப்பற்றாததே ஆகும்.

அதாவது, 2014ம் ஆண்டு நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் விராட் கோலியை 4 முறை ஆட்டமிழக்கச் செய்தார் ஆண்டர்சன். அதன்பிறகு 2018ம் ஆண்டு நடந்த தொடரில் கோலியை அவரால் சாய்க்க முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது நடந்து தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலேயே கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் கைப்பற்றியுள்ளார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராத் கோலியின் விக்கெட்டை 9ஆவது முறையாக அவர் வீழ்த்தி இருக்கிறார்.

இதுபற்றி ஆண்டர்சன் கூறுகையில், “கோலியின் விக்கெட்டை நான் கைப்பற்றுவேன் என அவருக்கு நான் சவால் விடுத்திருந்ததாக நினைக்கிறேன். எந்த பகுதியில் பந்தை வீசினால் அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியும் என்பதை கணித்து, அதன்படி வீசினேன். விக்கெட்டும் கிடைத்தது. கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. எனவே, மைதானத்தில் அதிக உற்சாகமடைந்தேன்,” எனக் கூறினார்.

Views: - 428

0

0