இங்., வீரர்களிடம் இருந்து நீங்காத இனவெறி… மேலும் 2 சீனியர் வீரர்களுக்கு ஆப்பு…!!!

9 June 2021, 1:49 pm
england team - updatenews360
Quick Share

இந்தியர்களின் ஆங்கிலம் பேசும் விதத்தை கேலி செய்து உரையாடிய இங்கிலாந்து அணியின் இரு சீனியர் வீரர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிறவெறி, பெண்கள் குறித்த ஆபாச கருத்து உள்ளிட்ட டுவிட்களினால் தனது அறிமுக போட்டியில் இருந்தே தடை செய்யப்பட்டார் இங்கிலாந்து அணியின் புதுமுக வீரர் ஆலி ராபின்சன். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் மற்றும் விக்கெட் கீப்பர் பட்லரும் இனவெறியை தூண்டும் விதமாக டுவிட் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக, இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ள நிலையில், இந்தியர்களின் ஆங்கிலம் பேசும் விதத்தை கேலி செய்து இருவரும் கடந்த 2017-18ல் உரையாடிய சர்ச்சை தற்போது வெளியே வந்துள்ளது.

இது தொடர்பாக டெலிகிராப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், “2017-18-ல் இயான் மோர்கன் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வேண்டுமென்றே இந்திய மக்களின் ஆங்கிலம் பேசும் முறையை கேலி செய்யுமாறு ஒருவகையான உடைந்த ஆங்கிலத்தைப் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இந்திய மக்களை கிண்டல் செய்யுமாறு ‘சார்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் அவர்களின் டுவிட்டகளின் ஸ்கிரீன்ஷாட்கள் வைரலாகி வருகிறது. அதில் “I always reply sir no1 else like me like you like me” என்ற பட்லரின் மெசேஜ்ஜுக்கு, “Sir, you play very good opening batting” என்று மோர்கன் இந்திய ஆங்கிலத்தை கேலி செய்துள்ளனர்.

ஆலி ராபின்சன் நிறவெறி பிரச்சனையில் சிக்கியவுடன் இத்தகைய உரையாடல்கள் பலவற்றை இருவரும் நீக்கியுள்ளனர். ஆனால், இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Views: - 311

0

0