இங்கிலாந்து அணியில் 7 பேருக்கு கொரோனா : சிக்கலில் பாக்., தொடர்… ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி விரைவில் அறிவிப்பு

6 July 2021, 3:25 pm
england team - updatenews360
Quick Share

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 8ம் தேதி நடக்கிறது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் மற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, பாக்., தொடருக்கு இன்னும் இருநாட்களே உள்ள நிலையில், புதிய வீரர்கள் கொண்ட அணியை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு உருவாகியுள்ளது. அதேவேளையில், காயத்தினால் ஒதுங்கியிருந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
,

Views: - 460

0

0