நடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு

19 January 2021, 8:49 am
natarajan - updatenews360
Quick Share

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியின் வீரர்களை சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழு இன்று தேர்வு செய்கிறது.

காயம் காரணமாக ஆஸி., தொடரில் இருந்து விலகிய இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஜடேஜா, அஸ்வின், ராகுல், விஹாரி ஆகியோர் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது, சையது முஸ்தக் அலி தொடரில் புவனேஸ்வர் குமாரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

கோலியின் வருகை, அஸ்வின், பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களின் வருகையால், தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Views: - 0

0

0