ஆஸி.,க்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி : 2 ரன்னில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..!

5 September 2020, 1:16 pm
eng - aus - updatenews360
Quick Share

சவுதாம்ப்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், முறையான மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடனான தொடர்களை தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலியாவுடன் தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

சவுதாம்ப்டனில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, மாலன் 66 ரன்களும், பட்லர் 44 ரன்கள் சேர்த்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, தொடக்க வீரர்களான பின்ச் (46), வார்னர் (56) அபார தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், அந்த அணியினால் 20 ஒவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Views: - 0

0

0