ரூட் அபாரம்.. வோக்சின் வேகம்… இங்கிலாந்திடம் மீண்டும் மண்ணை கவ்விய இலங்கை..!!

Author: Babu Lakshmanan
30 June 2021, 10:42 am
root odi - updatenews360
Quick Share

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவிய இலங்கை, அடுத்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் குஷால் பெராரா (73), ஹசரன்கா (54), கருணாரத்னே (நாட் அவுட் 19) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை எடுத்தனர். எஞ்சிய 8 வீரர்கள் ஒற்றை இலக்குடன் பெவிலியன் திரும்பினர்.

இதனால், 42.3 ஓவர்களில் 185 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், வில்லி 3 விக்கெட்டுக்களும், மொயின் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய இங்கிலாந்து இலக்கை நோக்கி சிறப்பாக விளையாடியது. பேர்ஸ்டோவ் (43), ரூட் (79 நாட் அவுட்), மொயின் அலி (28) ஆகியோரின் சிறந்த பங்களிப்பினால் 34.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

Views: - 440

0

0