சாம் கரணின் வேகம்… சுருண்டது இலங்கை… ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து…!!

2 July 2021, 11:25 am
Quick Share

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்த அணி தொடரை வென்றது.

ஓவல் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி சில்வா 91 ரன்களும், ஷனகா 47 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரண் 5 விக்கெட்டுகளும், டேவிட் வில்லை 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 60 ரன்களும், ரூட் 68 ரன்களும், கேப்டன் மார்கன் 75 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி ஜுலை 4ம் தேதி நடக்கிறது.

Views: - 407

0

0