களமிறங்கும் நடராஜன்: மறுபடி டாஸ் வென்ற இங்கிலாந்து… இந்திய அணி பேட்டிங்!

Author: Udhayakumar Raman
28 March 2021, 1:05 pm
Quick Share

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று புனேவில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் டாம் கரணுக்கு பதிலாக மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் குல்தீப் யாதவிற்குபதிலாக நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார்.

அணி விவரம்:
இந்தியா:

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கே), கே எல் ராகுல்(வி), ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, சார்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து:
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், தாவித் மலான், ஜாஸ் பட்லர் (வி & கே), லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம் கரண், மார்க் வுட், அடில் ரசித் , ரீச்சி டாப்லே.

Views: - 77

0

0