சென்னை ஆடுகளம் ஷேசிங்கிற்கு சாதகமானதல்ல : புலம்பிய இயான் மார்கன்!

14 April 2021, 2:33 pm
Quick Share

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் இலக்கை துரத்துவதற்குச் சாதகமான ஆடுகளம் இல்லை எனக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சென்னையில் நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்ற மார்கன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதை அடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 152 ரன்கள் எடுத்த நிலையில் இந்த இலக்கை எட்ட முடியாமல் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியைச் சந்தித்தது. இதற்கிடையில் சென்னையில் இதுவரை நடந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டு முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி தோல்வியைச் சந்தித்துள்ளது.

இதில் விதிவிலக்காக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாகப் பெங்களூரு அணியின் டிவிலியர்ஸ் அமைந்தார். இந்த தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான மார்கன் கூறுகையில், “இந்த போட்டியில் கடைசி வரை பேட்டிங் செய்து போட்டியை முடித்திருக்க வேண்டியது எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களின் கடமையாக இருந்தது. ஆனால் இந்த ஆடுகளத்தில் நடந்த ஒவ்வொரு போட்டியும் இறுதிக் கட்டத்தை நெருங்கும் பொழுது அந்த இலக்கை எட்டுவதற்கு மிகவும் கடினமானதாக மாறியதைக் காணமுடிந்தது.

இதில் விதிவிலக்காக ஏபி டிவில்லியர்ஸ் மட்டும் அமைந்தார். மும்பை இந்தியன்ஸ் நீண்டநாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த போட்டியில் நாங்கள் செய்த சில தவறுகளை எடுத்துத் திருத்திக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சரியாக்கிக் கொள்வதே தற்போதைய திட்டம். வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்தது உண்மையில் மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. மேலும் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் செய்த சில தவறுகள் இந்த போட்டியை அவர்களுக்குச் சாதகமாக மாற்றியது” என்றார்.

Views: - 24

0

0