கிரிக்கெட் மட்டுமல்ல கால்பந்து ரசிகர்களின் கனவையும் பந்தாடியது கொரோனா..!

12 August 2020, 4:14 pm
football - updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும் எந்தவிதமான விளையாட்டு தொடர்களும் நடத்தப்படவில்லை. டோக்கியோ ஒலிம்பிக், டி20 உலகக்கோப்பை தொடர், ஐபிஎல் உள்ளிட்ட முக்கிய தொடர்களும் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில தொடர்கள் மட்டுமே கடுமையான மருத்துவ கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடத்தப்பட்டு வருகிறது.

ஃபிபா ரசிகர்களின் கனவிலும் கொரோனா விளையாடி விட்டது. வரும் 2022ம் ஆண்டு ஃபிபா கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடக்கவிருக்கிறது. அதேபோல, ஆசிய கோப்பை கால்பந்து தொடரும் இந்த ஆண்டு நடப்பதாக இருந்தது. இவ்விரண்டு தொடர்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், அடுத்த மாதத்தில் தொடங்கி நவம்பரில் முடிவடைய இருந்தது.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த இரு தொடர்களுக்கு தகுதிச் சுற்றுப் போட்டிகளும், 2021-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போட்டி எங்கெல்லாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததோ, அதே பகுதிகளில் அடுத்த ஆண்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0