பலெர்மோ மகளிர் ஓபன் டென்னிஸ் : பியானோ பெர்ரோ சாம்பியன்..!

10 August 2020, 12:27 pm
fiona-ferro - updatenews360
Quick Share

பலெர்மோ மகளிர் ஓபன் டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியானோ பெர்ரோ சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் முதல் சர்வதேச டென்னிஸ் தொடராக பலெர்மோ மகளிர் ஓபன் டென்னிஸ் தொடர் இத்தாலியில் நடைபெற்றது. வீராங்கனைகள் மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள், பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் இந்தத் தொடர் நடத்தப்பட்டது. குறைந்த அளவிலான பந்து எடுக்கும் சிறுவர், சிறுமிகள், குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், வீராங்கனைகள் ஒருவவெருக்கொருவர் கைக் குலுக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகளுடன் நடத்தப்பட்டது.

இந்தத் தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியோனா பெர்ரோவும், எஸ்தோனியா நாட்டை சேர்ந்த ஆனெட் கொன்டாவெயிட்டும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில், 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதுவரை 6 இறுதி போட்டிகளில் விளையாடியுள்ள ஆனெட் கொன்டாவெயிட், அதில் 5ல் தோல்வி தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0