ஒருநாள், டி-20 போட்டிகளிலும் ரிஷப் பண்ட்: பிராட் ஹாக் ஐடியா!

23 January 2021, 6:33 pm
pant - updatenews360
Quick Share

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் சேர்க்கவேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடரைக் கைப்பற்ற பெரும் உதவியாக இருந்தார் இளம் வீரர் ரிஷப் பண்ட். இந்நிலையில் இவர் ஒருநாள் மற்றும் டி20 அரங்கில் சேர்க்கப்படவேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஹாக் கூறுகையில், “தற்போது இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இளம் வீரரான ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும். அவர் தற்போது மிகவும் தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறார். அதேபோல டெஸ்ட் தொடரில் இரண்டு முறை வெற்றியை வசப்படுத்தி நிரூபித்துள்ளார். இதைவிட ஒரு இந்திய வீரர் ஆஸ்திரேலிய மண்ணில் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நிரூபிக்க முடியாது.

அதனால் தேர்வுக்குழுவினர் ரிஷப் பண்ட்டை ஸ்ரேயஸ் ஐயருக்கு அதற்குப் பதிலாக இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் பலம் அதிகரிக்கும். அவரை ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது சஞ்சு சாம்சனுக்கு இருவரில் ஒருவருக்குப் பதிலாக அணியில் சேர்க்க வேண்டும். பண்ட்டுக்கு பந்து வீசுவது அவ்வளவு எளிதான காரியமல்ல ஏனென்றால் அவர் வித்தியாசமான ஷாட்களை முயற்சிக்கிறார். அது பெரிய அளவில் கை கொடுக்கிறது. இது ஒரு சிலரால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கும் மிகவும் பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறேன்.

இதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை மாற்ற வேண்டுமா என்ற கேள்வி குறித்தும் பிராட் ஹாக் பதில் அளித்தார். இது தொடர்பாக ஹாக் கூறுகையில், “விராட் கோலி கேப்டனாக இருக்கும் போதுதான் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். இதை மாற்றினால் அது அவரை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். அதேபோல இந்திய கலாச்சாரத்திற்கு இது ஊறுவிளைவிக்கும். அதனால் இது போன்ற நிகழ்வு நடக்கக் கூடாது என்பதே சரியானதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். அவர் மிகவும் அமைதியாகவும் பொறுப்பாகவும் காணப்பட்டார். அவர் மிகச் சிறந்த தலைவர் தான். இருந்தாலும் அவர் துணை கேப்டனாக இருப்பதே சிறந்ததாகும். இந்திய அணியை விராட்கோலி வழி நடத்துவது மிகவும் பொருத்தமானது” என்றார்

Views: - 5

0

0