மும்பையில் விளம்பர படத்தில் நடித்த முன்னாள் இந்திய கேப்டன் தோனி!

7 February 2021, 9:00 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி மும்பையில் விளம்பர படத்தில் நடிக்கச் சென்றிருந்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி பங்கேற்றிருந்தார். இந்த தொடருக்குப் பின்பு பொது இடங்களில் ரசிகர்களின் கண்களில் இதுவரை படாமல் இருந்தார் தோனி. இந்நிலையில் தற்போது மும்பையில் நடந்த விளம்பரப் பட சூட்டிங்கில் நடிக்க போது தோனி ரசிகர்கள் கண்களில் பட்டார்.

இதில் தனது வெள்ளை தாடியை முழுமையாக சேவ் செய்து காணப்பட்டார் தோனி. இந்த லாக் டவுன் காலத்தில் தோனி முழுவதுமாக வெள்ளைநிற தாடியுடன் காணப்பட்டிருந்தார். அதன்பின்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற போது கருப்பு நிற தாடியுடன் காணப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியே காணப்படும் தோனி, வரும் 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவார் என்று கடந்தாண்டு இறுதியில் தெரிவித்திருந்தார். அவரது விளையாட்டை இந்த முறை ஐபிஎல் தொடரில் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் அந்த விளம்பர படத்தில் தோனி பீச் நிற குர்தாவில் காணப்பட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கிடையில் வரும் 18ம் தேதி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் சென்னையில் நடக்கவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில் சுரேஷ் ரெய்னாவை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் அந்த அணி கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், மோனுசிங், பியூஸ் சாவ்லா மற்றும் முரளி விஜய் ஆகிய 6 வீரர்களை விடுவித்தது.

Views: - 0

0

0