இந்தியா வெல்லும் பிஷன் பேடி நம்பிக்கை: தலைவர் ஸ்டைலில் தட்டித்தூக்குங்க… ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

8 February 2021, 10:29 pm
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலக்கை வெற்றிகரமாக எட்டிப் பிடிக்கும் என முன்னாள் இந்திய வீரரான பிஷன் சிங் பேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற நாளைய ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 381 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இந்திய அணி இந்த இலக்கை வெற்றிகரமாக எட்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் பாதுகாப்பான முறைகளை மட்டுமே கையாண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிஷன் சிங் பேடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றிக்கான அழுத்தம் கொடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக தங்களின் பாரம்பரிய பாதுகாப்பான முறையைக் கையில் எடுத்தது. இந்திய அணியால் இதைப் பொய்யென்று நிரூபிக்க முடியும். அவர்கள் பயமுறுத்தினால் அதிலிருந்து மீண்டு வந்து ஐந்தாவது நாள் ஆட்டத்தில் சேப்பாக்கத்தில் அதைப் பொய் என்று நிரூபிக்க வேண்டும். தற்போதும் டெஸ்ட் கிரிக்கெட் தான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவிற்குப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் முந்தைய இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டத்தை நினைவுபடுத்தும் விதமாகப் பதிவுகளை அளித்து வருகின்றனர். இதே மைதானத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய அணி வெற்றி பெறக் கடைசி நாளில் 386 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் 68 பந்தில் 83 ரன்கள் விளாசி அசத்தினார். இவரின் இந்த அதிரடி ஆட்டம் மூலம் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றிகரமாக இலக்கை எட்டியது. இதேபோல தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரரான ரிஷப் பண்ட், சேவக்கின் ஆட்ட முறையைக் கையில் எடுத்தால் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற முடியும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0