இந்த காரணத்திற்காக எல்லாம் இந்திய டீம் கேப்டன் பொறுப்பில் கோலியை நீக்க முடியாது!

30 March 2021, 10:57 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு கேப்டன் முறை என்பதை முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர் சரன்தீப் சிங் மறுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சரன்தீப் சிங். இவர்
இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு கேப்டன் முறை என்பதை மறுத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் கேப்டனாக கோலியின் சாதனைகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

தவிர ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்லவில்லை என்ற காரணத்திற்காக இந்திய கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்க முடியாது என்று சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார். கோலி கடந்த 2013 முதல் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஆனாலும் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அந்த அணி ஒருமுறை கோப்பை வென்றது கிடையாது.

சர்வதேச கிரிக்கெட்டில் 2014 முதல் டெஸ்ட் போட்டிகளிலும், 2017 முதல் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளும் இந்திய அணியை கோலி வழிநடத்தி வருகிறார். இருநாடுகளுக்கு இடையேயான பல முக்கியமான தொடர்களை கோலி தலைமையில் இந்திய அணி கைப்பற்றிய போதும் கடந்த 2013க்கு பின் ஐசிசி கோப்பைகளை இதுவரை இந்திய அணி வென்றதில்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொட ர் ஃபைனல் வரை முன்னேறிய இந்திய அணி அதில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது. 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்ற விவாதம் கிளம்பியது.

இதுகுறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சரன்தீப் சிங் கூறுகையில், “இரட்டை கேப்டன் முறை என்பது ஒரு கேப்டன் சர்வதேச கிரிக்கெட்டில் சரியாக செயல்பட முடியாத இக்கட்டான நிலை ஏற்படும் போது தான். ஆனால் கோலியைப் பொறுத்தவரையில், மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் சராசரி 50க்கும் மேல் உள்ள ஒரே பேட்ஸ்மேன். பிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்லவில்லை என்ற காரணத்திற்காக இந்திய கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்க முடியாது. கோலி இல்லாத போது இந்திய அணியை ரோகித் வழிநடத்தி வருகிறார். தற்போது கோலியை மாற்றா வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

Views: - 59

1

0