‘சென்னை அணியில் இருக்க பிடிக்கவில்லை’ : வெளிப்படையாக டுவிட் போட்ட வெளிநாட்டு வீரர்..!

Author: Babu
9 October 2020, 7:59 pm
Csk - updatenews360
Quick Share

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை அணிக்கு சிறப்பானதாக இல்லை. நட்சத்திர வீரர் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் திடீரென தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக உள்ளது. டூபிளசிஸை தவிர அணியின் மற்ற வீரர்களும் ஃபார்மில் இல்லாததால், இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மேலும், அணியின் வீரர்களின் தேர்வில் தோனி தவறு செய்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் வரை முன்னேறியுள்ள சென்னை அணிக்கு, இந்த ஆட்டம் இப்படியே நீடித்தால், இந்த முறை பிளே ஆஃப்பிற்கு முன்னேறுவது சந்தேகம்தான்.

இந்த நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான தென்னப்ரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி, சிஎஸ்கே மீதான அதிருப்தியை வெளிப்படையாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

டுவிட்டரில் சென்னை அணியின் பெயரை குறிப்பிடாமல் அவர் விடுத்துள்ள பதிவில், “எனக்கு அதிகளவிலான தீங்கு நடக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். நமக்கு அனைத்துமே குடும்பம்தான் என்ற நிலையில், எப்படி குடும்பத்தை பற்றி பேசாமல் இருக்க முடியும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவிற்கு சென்னை அணியின் ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். அப்படி, ரசிகர் ஒருவர், “உங்களுக்கு சென்னை அணியில் சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. நீங்கள் வேறு அணிக்கு விளையாட தகுதி வாய்ந்தவர்,” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கமெண்ட்டிற்கு இங்கிடி லைக் செய்துள்ளார். இதன்மூலம், சென்னை அணியின் மீதான அவரது அதிருப்தி வெளிப்பட்டுள்ளது.

நடப்பு சீசனில் சென்னை அணிக்காக 2 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிடி, 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 30 ரன்களை கொடுத்ததை தொடர்ந்து, அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 44

0

0