பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்

12 June 2021, 11:37 pm
Quick Share

பிரஞ்சு ஒபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை கிரெஜ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை எதிர்த்து செக் குடியரசின் பார்போரா கிரெஜ்கோவா களம்கண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றிய பார்போரா, இரண்டாவது செட்டை 2-6 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியாவிடம் இழந்தார்.இதையடுத்து நடைபெற்ற போட்டியின் 3 வது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இறுதியில் 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்கோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Views: - 374

0

0