விறுவிறுப்பான பிரெஞ்ச் ஓபன் : முன்னணி வீரர்கள் ஜோகோவிச், நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்…!!

8 June 2021, 11:20 am
nadal - djokovic - updatenews360
Quick Share

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ஜோகோவிச் மற்றும் நடால் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

பாரீசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில், மன அழத்தம் உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்து வீரர், வீராங்கனைகள் விலகி வருவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில், எஞ்சிய வீரர்களின் அனல்பறக்கும் ஆட்டம், போட்டியை விறுவிறுப்பாக்கிக் கொண்டே செல்கிறது.

இதன் ஒரு பகுதியாக, 13 முறை பிரெஞ்ச் ஓபனை வென்ற நடால், 19 வயது சின்னரை எதிர்த்து 4வது சுற்றில் விளையாடினார். இதில், 7-5, 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் நடால் எளிதில் வென்றார்.

இதேபோல, சுவிட்சர்லாந்தின் அனுபவ வீரர் ஜோகோவிச், இத்தாலியின் முசெட்டியை 6-7(7), 6 -7(2), 6-1, 6-0, 4-0 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இறுதி செட்டில் காயம் காரணமாக முசெட்டி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதன்மூலம், 12வது முறையாக காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.

Views: - 385

0

0