பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஒரு மணி நேர ஓய்வு!!

12 May 2021, 8:19 pm
Quick Share

சர்வதேச கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒரு தொடராக கருதப்படுவது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர். இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு சுமார் ஒரு மணி நேரம் தினமும் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி தொடங்கயிருந்த இந்த தொடரின் முதல் கட்டப் போட்டிகள் தற்போது மே 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த தொடர் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடரின் போட்டிகளைப் பார்க்க தினமும் சுமார் 1000 ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு நேரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், “எங்களது நோக்கம் ஒவ்வொரு வீரர்களின் கழுத்த்தில் சங்கிலியை அணிந்து அதை ஹோட்டல் அறையிலோ அல்லது போட்டிகள் நடக்கும் மைதானத்திலேயே கட்டப்படுவது இல்லை. இந்த வைரஸ் தாக்கம் குறித்த ஆபத்தான நிலையை நன்கு உணர்வோம்” என்றார்.

இந்த தொடரை காண வரும் 11 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்கள் அனைவரும் தங்களது முக கவசம் அணிந்து மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி முதல் அப்போதைய சூழ்நிலையை ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் போட்டியை நடத்தும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல சுமார் பத்து நாட்களுக்கு இரவு நேரத்தில் போட்டிகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டிகளை பார்த்து ரசிக்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிகிறது. ஏனென்றால் இரவு நேரத்தில் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் வரும் ஜூன் 9-ம் தேதி நடக்கும் பைனல் போட்டியை பார்க்க மட்டும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 270

0

0