பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து செரீனா விலகல்..!

30 September 2020, 7:53 pm
serina willams - updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடக்கவிருந்த விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் சோபியா கெனினும் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர். பின்னர், ரசிகர்கள் இல்லாமல் நடத்தி முடிக்கப்பட்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் பிரிவில் டொமினிக் தீம், பெண்கள் பிரிவில் நமோமி ஒசாகாவும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

கடந்த மே மாதம் நடப்பதாக இருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சுறுத்தலால், செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, கடந்த 27ம் தேதி இந்தத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரை காண ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டி அன்-ஐ எதிர்கொண்டார். இதில் செரீனா 7(7)-6(2), 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இன்று நடைபெற இருந்த 2வது சுற்றில், பல்கேரியா வீராங்கனை பிரோன்கோவை எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், குதிகால் காயத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

Views: - 9

0

0