பிரெஞ்ச் ஓபன் டென்னிஸை காண ரசிகர்களுக்கு அனுமதி : முன்னணி வீரர் எதிர்ப்பு

15 September 2020, 4:01 pm
french open 2- updatenews360
Quick Share

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு முன்னணி வீரர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடக்கவிருந்த விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் சோபியா கெனினும் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர். பின்னர், கடந்த வாரம் ரசிகர்கள் இல்லாமல் நடத்தி முடிக்கப்பட்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் பிரிவில் டொமினிக் தீம், பெண்கள் பிரிவில் நமோமி ஒசாகாவும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

கடந்த மே மாதம் நடப்பதாக இருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சுறுத்தலால், செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, வரும் 27ம் தேதி இந்தத் தொடர் தொடங்குகிறது. மேலும், பிரெஞ்ச் ஓபனை காண ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்ச் ஓபன் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு முன்னணி வீரரான ரபேல் நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் ரசிகர்களுக்கு அனுமதியளிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.

Views: - 0

0

0