மனஅழுத்தத்தால் பிரெஞ்ச் ஓபனில் இருந்து முன்னணி வீராங்கனை விலகல் : செரினா உள்ளிட்ட வீராங்கனைகள் ஆதரவு…!!

1 June 2021, 12:15 pm
osaka - serina - updatenews360
Quick Share

மன அழுத்தம் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகாவிற்கு சக வீராங்கனைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாரீசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை அவர் புறக்கணித்தார். இதையடுத்து, போட்டி அமைப்பு குழுவின் விதிகளை மீறியதாக ஒசாகாவுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா அறிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், “2018ம் ஆண்டு அமெரிக்க ஓபன் தொடரில் இருந்தே நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்து வருகிறேன். இதனை கையாள எனக்கு கடினமாக இருந்தது. பிரெஞ்ச் ஓபனில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக இருந்து விடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒசாகாவின் இந்த அறிவிப்பிற்கு பல முன்னனி வீரர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செரினா வில்லியம்ஸ் கூறுகையில், “நவோமி ஒசாகா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். அவரது நிலையில் நானும் இருந்திருக்கிறேன். என்னால் அவரை புரிந்து கொள்ள முடிகிறது.அவருக்கு எனது ஆதரவை நான் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் கூறினார்.

Views: - 379

0

0