பிரெஞ்ச் ஓபன் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி: விளையாட்டு அமைச்சர்!

3 May 2021, 11:50 am
Quick Share

பிரெஞ்ச் ஓபன் தொடரை காண ஒரு கோர்ட்டுக்கு ஆயிரம் ரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒரு தொடராக நடத்தப்படுவது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர். சர்வதேச அளவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் காரணத்தினால் விளையாட்டுப்போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் காலி மைதானத்தில் மட்டுமே தற்போது வரை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் உள்ள ஆடுகளத்தில் சுமார் 35% இருக்கைகளை நிரப்ப அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் மைக்கேல் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் நாட்களில் 65 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய மைதானத்தில் வெறும் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், பத்தாயிரம் இருக்கைகள் கொண்ட மைதானத்தில் 60% ரசிகர்கள் நிரப்ப படுவார்கள் என்றும் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் கூறுகையில், “தற்போதைய நிலைக்கு 35% ரசிகர்கள் மட்டுமே அமர்ந்து போட்டியை காண அனுமதிக்கப்படுவார்கள். அந்தவகையில் ஒரு கோர்ட்டுக்கு சராசரியாக 1000 ரசிகர்கள் போட்டியை காண முடியும்” என்றார். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாமதமாக நடத்தப்பட்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து சற்று முன்னேற்றம் ஆகவே பார்க்கப்படுகிறது.


இந்த ஆண்டும் சுமார் ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் வரும் தாமதமாக வரும் மே மாதம் 30-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் வரும் மே மாதம் 19 ஆம் தேதி முதல் போட்டிகளை நேரில் மைதானத்தில் ரசிகர்களுக்கு காண அனுமதி வழங்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

Views: - 149

0

0

Leave a Reply