அங்க வேணும்னா சாதிக்கலாம்… இங்க எதுவுவே வேலைக்கு ஆகாது: காம்பீர்!

1 February 2021, 9:29 pm
Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை மண்ணில் சாதித்து இருக்கலாம் ஆனால் இந்திய மண்ணில் சாதிக்க முடியாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி, டாம் பெஸ், ஜாக் லீச் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் மொயின் அலி மட்டுமே அனுபவம் பெற்ற சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். இவர் 60 டெஸ்டில் பங்கேற்று 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெஸ் மற்றும் லீக் ஆகியோர் 12 போட்டிகளில் மட்டும் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 31 மற்றும் 44 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

இதுகுறித்து காம்பீர் கூறுகையில், “எனக்கு தெரிந்து இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்லாது. அவர்கள் வைத்துள்ள சுழற்பந்து வீச்சை வைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே கிடையாது. இந்த தொடரை இந்திய அணி 3 -0 அல்லது 3 -1 கைப்பற்றும் என நினைக்கிறேன். பகலிரவு ஆட்டமாக நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் எனது கணிப்பு 50 – 50 ஆக உள்ளது. இங்கிலாந்து அணிக்கு இது ஓரளவுக்கு சாதகமான விஷயம் என நினைக்கிறேன்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டிற்கு இது முற்றிலும் மாறுபட்ட சவாலாக இருக்கும் என நினைக்கிறேன். அவர் இலங்கை மண்ணில் சிறப்பாக செயல்பட்டது உண்மைதான் ஆனால் ஜஸ்பிரித் பும்ரா போன்ற பலரை எப்படி ஒரு ஆடுகளத்தில் எதிர்கொள்வது மிகவும் சவாலான விஷயம் தான். ஆஸ்திரேலிய தொடருக்கு பின்பாக அஸ்வினின் தன்னம்பிக்கையும் வானளவு உயர்ந்து உள்ளது. அதனால் இந்த தொடர் எப்படியும் இங்கிலாந்து அணிக்கு மிகக்கடுமையான சவாலாகவும் வித்தியாசமான போட்டியாகவும் திகழும் என்பதில் சந்தேகமே இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணியை வழிநடத்த சரியான தலைவர் விராட் கோலி மட்டும் தான். ஆனால் எஞ்சியுள்ள வீரர்கள் நினைக்கும் போதும் மகிழ்ச்சியாகவே உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் கோலி மீது எந்த குறையும் கூற முடியாது. ஆனால் டி20 போட்டிகளில் பொருத்தவரை கோலியின் கேப்டன் பொறுப்பு ஒரு கேள்விக்குறியாக தான் உள்ளது. ஆனால் ஒருநாள் போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் தலைமையில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இவரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மேலும் வளர்ச்சியடையும்”என்றார்.

Views: - 0

0

0