தாய்லாந்து ஓபன் தொடரில் பங்கேற்க சாய்னா நேவல், பிரனாய் ஆகியோருக்கு கிரீன் சிக்னல்!

12 January 2021, 8:15 pm
Quick Share

ஆச்சரியமூட்டும் திடீர் திருப்பமாகத் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பிரனாய் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச பேட்மின்டன் கூட்டமைப்பு மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதை உறுதி செய்தது. இதற்காக நடத்தப்பட்ட சோதனையில் இந்தியாவின் சாய்னா நேவால், பிரனாய், ஜெர்மனியின் ஜோன்சன் ஆகியோருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் பிரனாய், ஜான்சன் ஆகியோருக்கு சோதனை முடிவு நெகட்டிவ் என வந்தது. ஆனால் சாய்னாவுக்கு கொரோனா பாசிடிவ் என முடிவு வந்தது.

இந்நிலையில் இவர்களுக்குத் தொற்று உள்ளதை உறுதி செய்ய மீண்டும் இரண்டாவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. அதில் ஆண்டிபாடி சாதகமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தாய்லாந்து அரசு உயர்மட்ட கமிட்டி இந்த வீரர்களுக்கு பாசிட்டிவ் என வந்தாலும் அவர்களின் ஆன்டிபாடி சாதகமாக உள்ளதாக தெரிவித்தது. இதன் மூலம் அந்த நபர் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால் தற்போது அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்தது.

மேலும் அந்த கமிட்டி இவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. முன்னதாக சாய்னாவிற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 3 வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகினார். இதற்கிடையில் முன்னாள் நம்பர் 1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், சோதனை நடத்தப்பட்ட முறையைச் சரி இல்லை எனத் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதில் மூக்கிலிருந்து ரத்தம் வடியும் படியான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இங்கு வந்து இறங்கியது முதல் நான்கு முறை சோதனை செய்யப்பட்டுள்ளேன். இது எளிதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்தது. இதற்காக ரத்தமும் சிந்த வேண்டி இருந்தது” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 7

0

0