மும்பை அணியுடன் இணைந்த பாண்டியா சகோதரர்கள், சூர்ய குமார் யாதவ்!

Author: Udhayakumar Raman
29 March 2021, 4:07 pm
Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிரான தொடரில் அசத்திய பின் குர்னால் மற்றும் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதித்த பின் ஹர்திக் பண்டியா மற்றும் குர்னால் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை டி-20 தொடருக்கான அணியில் முதலில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்தார். பின்னர் ஒருநாள் அணியிலும் சேர்க்கப்பட்டார்.

குர்னால் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகி தனது முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தினார். இந்நிலையில் இவர்கள் மூவரும் மும்பை இந்தியன்ஸ் அணியும் அணி வீரர்களுடன் இணைந்துள்ளனர். இதை மும்பை இந்தியன்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்திய அணிக்காக அறிமுகமானது மகிழ்ச்சி அளிப்பதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சூரியகுமார் கூறுகையில், “முதலில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்து இன்னும் அதைச் சிறப்படையச் செய்துள்ளது. தற்போதைக்கு எனக்குக் கொடுக்கப்பட்ட அந்த வாய்ப்பை சிறப்பாகச் செய்து விட்டேன். மீண்டும் மும்பை அணி குடும்பத்தினருடன் சேர்ந்து உள்ளேன். ஐபிஎல் தொடரிலும் எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறேன்” என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் இந்த போட்டி நடக்க உள்ளது

Views: - 255

3

0