பாண்டியா பிரதர்ஸின் தந்தை காலமானார் : கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் இரங்கல்

16 January 2021, 1:41 pm
hardik-pandya- - updatenews360
Quick Share

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவின் தந்தை இன்று காலமானார்.

பாண்டியா பிரதர்ஸ் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியா இருவரும் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் இருவரும் மும்பை அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஐபிஎல் தொடருக்கு பிறகு எந்தவித கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்காத, ஹர்திக் பாண்டியா, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவரது சகோதரர் குருனால் பாண்டியா, சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பரோடா கிரிக்கெட் அணி கேப்டனாக ஆடி வருகிறார். கொரோனா மருத்துவ பாதுகாப்புக்கு நடுவே இந்தத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நெஞ்சு வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த பாண்டியா பிரதர்ஸின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா இன்று காலை அவரது வீட்டில் காலமானார்.

இவரது மறைவையடுத்து, சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் இருந்து குருனால் பாண்டியா விலகியுள்ளார். இந்த தகவலை பரோடா கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், விராட் கோலி உள்பட சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 10

0

0