‘அடி பட்டிருக்குனு சொன்னாங்க’… இங்க என்ன நடக்குது ? ‘செம்ம ஜாலி போல’… (வீடியோ)

14 February 2020, 1:55 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, உடல் பயிற்சி செய்யும் போது பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து தொடரின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால், அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். மேலும், இஷாந்த் சர்மாவும் ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடிய போது அடிபட்டதால், ஓய்வில் இருக்கிறார். ஆனால், உடற்தகுதி தேர்வில் இஷாந்த் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியும் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இஷாந்த் ஷர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் அடுத்துவரும் போட்டிகளுக்காக தயாராகி கொண்டு உள்ளனர். அவர்கள் இருவரும் பயிற்சி செய்யும் போது ஜாலியாக நடனமாடிய வீடியோவை இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.