கோலியை மட்டும் எப்படி அவுட்டாக்க போறோம்ன்னு தெரியல: புளம்பும் இங்கிலாந்து வீரர்!

31 January 2021, 10:09 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை எப்படி அவுட்டாக்க போகிறோம் என தெரியவில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி தொடர் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதில் தனது முதல் குழந்தையின் வருகைக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின் பாதியில் திரும்பிய கேப்டன் விராட் கோலி களமிறங்குகிறார். கோலி இல்லாத நிலையில் இளம் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியை ஒருகை பார்த்த நிலையில், இவரின் வருகை இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இந்நிலையில் இவரை எப்படி அவுட்டாக்க போகிறோம் என இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மொயின் அலி கூறுகையில், “கோலியை எப்படி அவுட்டாக போகிறோம் என்று தெரியவில்லை. அவர் உண்மையில் உலகத்தரமான சிறந்த வீரர். அதுவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எப்போதும் உத்வேகத்துடன் காணப்படுவார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து கோலி மேலும் அதிக உத்வேகத்துடன் காணப்படுவார்.

கோலிக்கு எந்த ஒரு பலவீனமும் இல்லாத நிலையில் அவரை எப்படி வீழ்த்துவது என்று தெரியவில்லை. இருந்தாலும் இங்கிலாந்து அணியில் சிறந்த பந்துவீச்சு உள்ளது. சிறந்த பவுலர்கள் உள்ளனர். அவர்கள் கோலிக்கு எதிராக மிகச்சிறந்த திட்டத்தை செயல்படுத்துவார்கள். கோலி மிகச்சிறந்த நபர் மேலும் எனது சிறந்த நண்பரும் கூட. இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது கிரிக்கெட்டைப் பற்றி அதிகமாக பேச மாட்டோம். இந்திய அணியை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன்” என்றார். இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற பின், தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

Views: - 0

0

0