உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டம் டிராவானால் யார் வெற்றியாளர்… ஐசிசியின் புதிய விதிமுறைகள் பற்றி தெரியுமா..?

28 May 2021, 2:10 pm
virat kohli - williamson - updatenews360
Quick Share

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரடியாக காண 4,000 ரசிகர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ஆயத்தமாகும் விதமாக, அந்த அணி இங்கிலாந்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கடைபிடிக்கப்படும் புதிய விதிமுறைகள் பற்றி ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, டெஸ்ட் சாம்பியன்ஷிப போட்டியின் இறுதி ஆட்டம் டிராவிலோ அல்லது டையிலோ முடிந்தால், இரு அணிகளும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நேர இழப்பு ஏற்பட்டால், அதனை ஈடு செய்ய ரிசர்வ் நாள் அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு நாள் ஆட்டத்தின் போது நேரஇழப்பு குறித்து போட்டி நடுவர்கள் அணி நிர்வாகிகளிடமும், ஊடகத்திடமும் அறிவிப்பார்கள். ரிசர்வ் நாளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது கடைசி நாளில் அதாவது 5-வது நாளில் முடிவு செய்யப்படும். இந்தப் போட்டியில் கிரேட்-1 டியூக் பந்துகள்தான் பயன்படுத்தப்படும்.

பேட்ஸ்மேன்கள் ரன் ஓடும்போது ஒரு பேட்ஸ்மேன் கிரீஸை சரியாக ரீச் செய்யாவிட்டால், 3வது நடுவர் தாமாக முன்வந்து, ஆய்வு செய்து, அந்த முடிவை அடுத்த பந்து போடுவதற்கு முன்பாக களநடுவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

எல்பிடபிள்யு அவுட் வழங்கும் முறையில் விக்கெட் (ஸ்டெம்ப்) உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பந்து ஸ்டெம்ப் பெயில்ஸ் பாதிப் பகுதியைத் தொடுமாறு சென்றாலும் அது அம்பயர்ஸ் கால் வழங்கப்படும். அதேபோல ஸ்டெம்பின் உயரம் மட்டுமல்லாது, பரப்பளவிலும் பாதியளவுக்கு பந்து உரசிச் செல்லும் என்றாலும் அம்பயர்ஸ் கால் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 485

0

0