புதிய விதியால் அலறிப் போன இந்தியா- இங்கிலாந்து அணிகள்…!!! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கிடைத்த ஆப்பு..!!!
Author: Babu Lakshmanan11 August 2021, 4:46 pm
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 183 ரன்களும், இந்தியா 278 ரன்களும் எடுத்தன. 95 ரன்கள் பின்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 303 ரன்கள் சேர்த்தது.
இதன்மூலம் 209 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 4வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது. 5-ம் நாள் முதல் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால், இந்திய அணியின் வெற்றி கைநழுவி போனது. முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்தப் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு ஐ.சி.சி 40 சதவீதம் சம்பளத்தை அபராதமாக ஐசிசி விதித்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகளை ஐ.சி.சி. குறைத்துள்ளது.
0
0