2021 மற்றும் 2023 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடப்பது உறுதி..! ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

7 August 2020, 8:49 pm
world_cup_icc_Updatenews360
Quick Share

2021 டி 20 உலகக் கோப்பையை இந்தியா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியா நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஐ.சி.சி தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் போட்டியை நடத்தவிருந்த ஆஸ்திரேலியா, இப்போது 2022’ல் டி 20 உலைகள் கோப்பை போட்டிகளை நடத்துகிறது. 2023’ஆம் ஆண்டில் இந்தியா 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பையையும் நடத்துகிறது. 2011’ஆம் ஆண்டில், இந்தியா இலங்கை மற்றும் பங்களாதேஷுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்த முன்னர் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம், டி 20 உலகக் கோப்பையை ஒத்திவைக்க ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக முடிவு செய்தது. மேலும் 2022’ஆம் ஆண்டிலும் இந்த நிகழ்வு நடத்தப்படும் என்று ஐ.சி.சி. உறுதிப்படுத்தியது. ஆனால் யார் நடத்துவது என்பது குறித்த அறிவிப்பை முன்னர் வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

பி.சி.சி.ஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, டி 20 உலகக் கோப்பைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டு, இந்தியா ஹோஸ்டிங் உரிமைகளை வைத்திருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டு வாரியங்களும் ஒரு சிறந்த உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. இதையடுத்து மார்ச் முதல் டீம் இந்தியா தனது முதல் சர்வதேச தொடரில் விளையாடும் முதல் நாடாக ஆஸ்திரேலியா இருக்கும்.

இதன் மூலம் கடந்த 2016’ல் நடந்த டி 20 உலைகள் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து ஈடன் கார்டனில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தனது பட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு தொடர்ந்து தக்க வைத்துள்ளது. 

அடுத்த ஒரு ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஐ.சி.சி நிகழ்வு எதுவும் இருக்காது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய பெண்கள் டி 20 உலகக் கோப்பை 2020 இல் விளையாடிய ஒரே ஐ.சி.சி போட்டியாக உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி குறித்த தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லை. அசல் அட்டவணையின்படி, போட்டியின் இறுதிப் போட்டி ஜூன் 2021’இல் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் ஐ.சி.சி நிகழ்வுகள் –

இந்தியாவில் 2021 டி 20 உலகக் கோப்பை

ஆஸ்திரேலியாவில் 2022 டி 20 உலகக் கோப்பை

இந்தியாவில் 2023 50 ஓவர் உலகக் கோப்பை