இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி.,யின் முக்கிய பவுலர் திடீரென விலகல்..!!

18 November 2020, 1:37 pm
australia cricket - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகியுள்ளார்.

ஐபில் தொடரை முடித்த கையோடு, நவ.,12ம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 27ம் தேதியும், டிச.,17ம் தேதி டெஸ்ட் தொடரும் தொடங்குகிறது.

முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் முனைப்புடன் உள்ளனர். அதேவேளையில், முன்னணி வீரர்கள் இல்லையென்றாலும், இந்திய அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என ஆஸ்திரேலிய வீரர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் திடீரென விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆன்ட்ரூ டை சேர்க்கப்பட்டுள்ளார்.

அண்மையில் தனக்கு பிறந்த குழந்தையுடனும், மனைவியுடனும் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக இந்தத் தொடரில் இருந்து அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.

Views: - 28

0

0