4வது டெஸ்டில் அஸ்வின் கன்ஃபார்ம்… முக்கிய வீரருக்கு ரீபிளேஸ் : மகிழ்ச்சியில் தமிழக ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
30 August 2021, 8:06 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. 4வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது. கடைசி இரு போட்டிகள் தான் தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் என்பதால், இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதல் 3 போட்டிகளில் ஒரேயொரு மாற்றத்துடன் விளையாடிய இந்திய அணியில், 4வது போட்டியில் முக்கிய மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அதாவது, கடந்த போட்டியில் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு எடுபடவில்லை. எனவே அடுத்த போட்டியில் அவர் ஆட வாய்ப்பில்லை. அதோடு, 3 டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னராக களமிறங்கி ஆடிய ரவீந்திர ஜடேஜாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த போட்டியில் அவரும் விளையாடுவது சந்தேகம்தான்.

எனவே, 4வது டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 343

0

0