இந்திய பவுலர்கள் மீண்டும் அசத்தல்… ரோஹித், புஜாரா நிதான ஆட்டம்: திணறிய இங்கிலாந்து!

4 March 2021, 5:04 pm
Quick Share

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி மீண்டும் திணறியது . இந்தியச் சுழற்பந்துவீச்சாளர்களான அக்‌ஷர், அஸ்வின் மீண்டும் அசத்தினர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியிலும் இந்திய சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாத இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் (55), லாரன்ஸ் (46) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அக்‌ஷர் படேல் (4 விக்கெட்), அஸ்வின் (3 விக்கெட்), சிராஜ் (2 விக்கெட்), சுந்தர் (1 விக்கெட்) விக்கெடுகளை கைப்பற்றினர்.

கில் ஏமாற்றம்
இதையடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சுப்மான் கில் (0) இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின் இணைந்த புஜாரா, ரோஹித் சர்மா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து ஆடிய இந்த ஜோடி சீரான இடைவேளையில் ரன்கள் சேர்த்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து 181 ரன்கள் பின் தங்கியுள்ளது. ரோஹித் சர்மா (8), புஜாரா (15) அவுட்டாகாமல் உள்ளனர்.

Views: - 1

0

0