இலங்கை ஜாம்பவான்கள் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜாம்பவான்கள்!

Author: Udhayakumar Raman
22 March 2021, 8:19 am
Quick Share

சத்தீஸ்கரில் நடந்த சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் இலங்கை ஜாம்பவான்கள் அணியை வீழ்த்தி இந்திய ஜாம்பவான்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சத்தீஸ்கரில் உள்ள ஷாகித் வீர் நாராயன் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்த கிரிக்கெட் தொடர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைத் தனிநபர்களுக்கு உணர்த்தும் விதமாக இந்த தொடர் நடத்தப்படுகிறது.

கடந்தாண்டு நடந்த இந்த தொடர் முதல் நான்கு போட்டிகள் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த முறை நடத்தப்பட்ட இந்த தொடரில் இந்திய ஜாம்பவான்கள் அணி ஃபைனலில் இலங்கை ஜாம்பவான்கள் அணியை எதிர்கொண்டது.

கேன் வில்லியம்சன், பின்ச் சாதனைகளை அசால்டு பண்ண ‘கிங்’ கோலி!

யுவராஜ் அரைசதம்
இது கடந்த 2011 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் ஃபைனல் போட்டிக்கு இணையாக பார்க்கபட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை ஜாம்பவான்கள் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய ஜாம்பவான்கள் அணிக்கு யுவராஜ் சிங் (60), யூசுப் பதான் (62*) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க இந்திய ஜாம்பவான்கள் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது.

ஆமைவேக பந்துவீச்சு… இந்திய அணிக்கு மீண்டும் அபராதம்!

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இலங்கை ஜாம்பவான்கள் அணிக்கு சனத் ஜெயசூர்யா (43), ஜெயசிங்கே (40) ஆகியோர் மட்டும் ஆறுதல் அளிக்க, இலங்கை ஜாம்பவான்கள் அணி 7 விக்கெட்டுக்கு 20 ரன்கள் மட்டும் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 62 ரன்கள் மற்றும் 2 விக்கெட் என ஆல் ரவுண்டராக அசத்திய யூசுப் பதான் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய ஜாம்பவான்கள் அணி இந்த தொடரில் முதல் முறையாக சாம்பியன்பட்டம் வென்ற அணி என்ற பெருமை பெற்றது. தொடர் நாயகன் விருதை இலங்கையின் திலகரத்னே தில்ஷன் வென்றார்.

Views: - 100

0

0