சாதனை படைக்குமா இந்திய அணி? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா -நியூசி மோதல்!!

18 June 2021, 9:30 am
Ind vs Nz Test - Updatenews360
Quick Share

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு மோதவுள்ளது.

2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கப்பட்டது. டெஸ்டில் 9 நாடுகள் இதில் கலந்து கொண்டனர். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றது.

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஐ.சி.சி கோப்பையையும் வென்றதில்லை. இதேபோல் நியூசிலாந்து அணி உலக கோப்பை போட்டியில் (50 ஓவர்) இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது

இதனால், இரு அணிகளும் இந்த டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கையில் ஏந்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய அணி நியூசிலாந்துடன் விளையாடிய 2 டெஸ்டிலும் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 376

0

0