இந்தியா – இலங்கை தொடர் நடப்பதில் சிக்கல் : பயிற்சியாளருக்கு கொரோனா பாதிப்பு

9 July 2021, 6:18 pm
india team - updatenews360
Quick Share

ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜுலை 13ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடர் ஜுலை 21ம் தேதி தொடங்கிறது.

இதனிடையே, இலங்கை தொடரில் பங்கேற்ற வீரர்கள் உள்பட இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி தனி விமானம் மூலம் கொழும்பு திரும்பியுள்ளனர்.

மேலும், இலங்கை வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால், இந்தியா – இலங்கை தொடர் நடக்குமா..? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Views: - 363

0

0