பொங்கல் பண்டிகையன்று அசத்திய நடராஜன், சுந்தர் : முதல் சர்வதேச டெஸ்டில் விக்கெட்டுக்களை கைப்பற்றி அபாரம்!!!

15 January 2021, 2:38 pm
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சர்வதேச முதல் டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

இரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போனில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு வழக்கம் போல, தொடக்கம் சரியாக அமையவில்லை. வார்னர் (1), ஹாரிஸ் (5) ஆகியோர் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

பின்னர், லபுக்ஷனே மற்றும் ஸ்மித் மீண்டும் ஜோடி சேர்ந்த சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 90ஐ நெருங்கிய போது, ஸ்மித்தின் (36) விக்கெட்டை, தனது அறிமுக டெஸ்டில் கைப்பற்றி அசத்தினார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். ஆனால், மறுபுறம் லபுக்ஷனே நிதானமாக ஆடி சதம் அடித்தார். இப்படி மரண ஃபார்மில் உள்ள வீரரை, 108 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார் தமிழக வீரர் நடராஜன். முன்னதாக, வேட் (45) இவருடைய முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட்டாகும்.

பொங்கல் பண்டிகையில் களம் கண்ட அறிமுக டெஸ்டிலேயே தமிழக வீரர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றி ஜொலித்து வருவது தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பெயின் (38), க்ரீன் (28) ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Views: - 8

0

0