இந்தியா – இங்., டெஸ்ட் நாளை தொடக்கம் : அவர் இல்லாமவா… ரசிகர்களை குஷிப்படுத்திய கோலியின் அறிவிப்பு..!!!

4 February 2021, 7:57 pm
Quick Share

சென்னை : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5 – 9 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 – 17 வரை சென்னையில் நடக்கிறது. தொடர்ந்து அஹமதாபத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 24 – 28 மற்றும் மார்ச் 4 – 8 வரையும் நடக்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் விளையாடுவார். அவருடன் நாங்கள் இந்த தொடரை ஆரம்பிக்க விரும்புகிறோம். அவர் நல்ல ஃபார்மில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

கிரிக்கெட் விளையாடும் போது நாட்டு பிரச்சனைகள் பற்றியும் பேசுவோம். இன்று அவரவர் கருத்துக்களை வீரர்கள் கூறியுள்ளனர். அணிகளுடனான ஆலோசனையில் இதுகுறித்து பேசினோம். அதன்பின் அணியின் திட்டம் குறித்து ஆலோசித்தோம், என்றார்.

Views: - 17

0

0