தடுத்து நிறுத்துமா இந்திய அணி…? 2வது நாளிலும் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் இங்கிலாந்து..!!

Author: Babu Lakshmanan
26 August 2021, 6:19 pm
Quick Share

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய பேட்ஸ்மென்களுக்கு இங்கிலாந்து பவுலர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். ரோகித் சர்மா, ரகானேவை தவிர்த்து வேறு எந்த வீரரும் இரட்டை இலக்கை எட்டவில்லை. இதனால், இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள், பர்ன்ஸ் மற்றும் ஹமீது சிறப்பாக விளையாடினர். இருவரும் அரைசதம் அடித்தனர். இதனால், அந்த அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 52 ரன்களும், ஹமீது 60 ரன்களும் எடுத்திருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியதும் பர்ன்ஸ் (61), ஹமீது (68) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, மலன் மற்றும் கேப்டன் ரூட் இணை நிதானமாக ஆடி வருகிறது.

தற்போது மதிய உணவு இடைவேளை வரையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.

Views: - 424

0

0