யார் பக்கம் வெற்றி…? பரபரப்பான கட்டத்தில் ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் : முந்த முனைப்பு காட்டும் இந்தியா…!!!

Author: Babu Lakshmanan
6 September 2021, 6:16 pm
india vs england - updatenews360
Quick Share

இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவலில் நடந்து வருகிறது.இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தது.

ரோகித் சர்மாவின் (127) சதத்தோடு, புஜாரா (61), ஷர்துல் தாகூர் (60), பண்ட் (50), கேஎல் ராகுல் (46), கோலி (44) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் இந்திய அணி 466 ரன்கள் குவித்தது.

367 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி நேற்று தனது ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்கள், பர்ன்ஸ் மற்றும் ஹமீது சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 5வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்த இணை நிதானமாகவே ஆடியது. இருவரும் 100 ரன்களை சேர்த்த போது, அரைசதம் விளாசிய பர்ன்ஸ் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, வந்த மலனும் 5 ரன்னில் ரன் அவுட்டானார்.

தற்போது மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் சேர்த்துள்ளது. ஹமீது 62 ரன்னுடனும், கேப்டன் ரூட் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

5வது மற்றும் கடைசி நாள் ஆட்டமான இன்று, இன்னும் 63 ஓவர்கள் வீசப்பட இருக்கிறது. அதில், 237 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்தும், 8 விக்கெட்டுக்களை கைப்பற்றினால் இந்தியாவும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இல்லையேனில் போட்டி சமனில் முடியும்.

Views: - 552

0

0