ஆடாம ஜெயிச்சோமடா…. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி ரத்து : தொடரை வென்றது இந்திய அணி

Author: Babu Lakshmanan
10 September 2021, 1:44 pm
kohli - rohit - updatenews360
Quick Share

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. 4 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குவதாக இருந்தது.

இந்த சூழலில், இந்திய அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட்டுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு அணியின் வீரர்களுக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில், யாருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், போட்டி நடைபெறுமா..? என்ற சந்தேகம் இருந்து வந்தது.

இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டதால், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.

Views: - 560

1

0