சென்னை டெஸ்ட் : இந்திய அணி 337க்கு ஆல் அவுட்… முதல் பந்திலேயே தெறிக்கவிட்ட அஸ்வின் …!!

8 February 2021, 11:47 am
SUndar - updatenews360
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சென்னையில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, கேப்டன் ரூட் 218 ரன்களும், சிப்லே 87 ரன்களும், ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், புஜாரா மற்றும் பண்ட் ஜோடி சிறப்பாக ஆடியது. ஒருபுறம் புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மறுமுனையில் பண்ட் தனது ஸ்டெயிலில் அதிரடி காட்டினார்.

புஜாரா (73), பண்ட் (91) ஆகியோர் விக்கெட்டை இழந்தாலும்,
மண்ணின் மைந்தர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர்ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சேர்ந்து 80 ரன்களை சேர்த்த நிலையில், அஸ்வின் (31) விக்கெட்டை இழந்தார். இருப்பினும், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆட, எதிர்முனைவில் வந்த இந்திய பேட்ஸ்மென்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 85 ரன்கள் குவித்தார்.

241 ரன்கள் முன்னிலையில் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, பர்ன்ஸ் முதல் பந்திலேயே அஸ்வினின் சுழலில் சிக்கினார். இதைத் தொடர்ந்து, சிப்லே, லாரன்ஸ் ஜோடி விளையாடி வருகிறது. உணவு இடைவேளை வரை இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் எடுத்துள்ளது.

Views: - 0

0

0