2வது இன்னிங்சில் இந்திய அணி சொதப்பல் ஆட்டம்… நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு!

23 June 2021, 7:38 pm
pant - updatenews360
Quick Share

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

சவுதாம்டனில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக 2 நாட்கள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், 5வது நாளான நேற்று நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்தது. ஏற்கனவே, ரிசர்வ் டே இன்று ஒதுக்கப்பட்டிருந்ததால், மழையால் 2 நாட்களின் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு, 6வது நாளான இன்று விளையாட அனுமதிக்கப்பட்டது.

32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இந்திய அணி இழந்து தடுமாறியது. இறுதியில் 170 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி தரப்பில் சவுதி 4 விக்கெட்டும், போல்ட் 3 விக்கெட்டும், ஜேமிசன் 2 விக்கெட்டும், வேக்னர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தற்போது இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

Views: - 395

0

0