மயாங்கின் மாயாஜாலம்… முன்னணி விக்கெட்டுகளை சுருட்டிய அஜிஸ் படேல் : முதல் நாளில் ரன் குவித்த இந்தியா…!!

Author: Babu Lakshmanan
3 December 2021, 6:51 pm
Quick Share

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. மழை காரணமாக, ஆட்டம் நண்பகல் 12 மணிக்குத்தான் ஆரம்பிக்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அஜாஸ் படேல் வீசிய 28வது ஒவரில் கில் (44) ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் வீசிய 30வது ஓவரில் புஜாரா (0) விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த கோலியும் அதே ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். ஆனால், கோலியின் பேடில் பந்து படுவதற்கு முன்பாக, பேட்டில் உரசியது தெரிய வந்தது. இதனால், தவறான முடிவை வெளியிட்ட 3வது நடுவர் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இதைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஷ் ஐயரும் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மயாங்க் அகர்வால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது. மயாங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளார். நியூசிலாந்து அணி தரப்பில் அஜிஸ் படேல் 4 விக்கெட்டுக்ககளையும் கைப்பற்றினார்.

Views: - 1127

0

0